தண்ணீர் நமது உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒரு மாமருந்து. போதிய தண்ணீர் குடிப்பதால், நரம்பு மண்டலம் பராமரிப்பும் பாதுகாப்பும் பெறுகிறது. நீர் நரம்பு மண்டலத்தை முறையாக இயங்கச் செய்கிறது, சுறுசுறுப்பாக்குகிறது. மலச்சிக்கல் முதல் மனச்சிக்கல் வரை அனைத்துக்கும் நல்ல மருந்து தண்ணீர்!
காலை எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடியுங்கள். இதனை ‘உஷாபானம்’ என்று முன்னோர் குறிப்பிட்டுள்ளனர். மூளையின் சக்தி சிறப்பாக செயல்பட்டு, மனம் சிந்தனை வளமிக்க ஒன்றாக அமையவும், சிறப்பான, துல்லியமான சிந்தனைக்கும் தூய்மையான குடிநீர் மிக மிக அவசியம்.
வைரஸ் கிருமிகளால் ஏற்படும் நோய்களான இன்ஃபுளுயன்சா, நிமோனியா, தொடர்இருமல், அம்மை, முதலிய பல தொற்று நோய்கள் வராமல் தடுக்க நிறைய தூய தண்ணீர் குடிப்பது மிக எளிய பாதுகாப்பு முறையாகும். ப்ளு (Flu) காய்ச்சலுக்கு ஓய்வும், தண்ணீரும் தான் மருந்து. சீனர்கள் இம்முறையை பெரிதும் கையாளுகிறார்கள். எனவே, நிறைய தண்ணீர் அருந்த தவறாதீர்; தயங்காதீர்!
மறுமொழி இடவும்