தண்ணீர் தான் என்றாலும்
கடலில் ஒரு நிறம்
கவின் மலையில்
அருவியில் ஒரு நிறம்
கைகளில் ஏந்த
நிறமற்ற ஒரு நிறம்
கரைக்குள் இருக்கும்
ஏரியில் ஒரு நிறம்
இப்படியாக எத்தனை நிறங்கள்
எடுத்த போதும் ஆவியாய் மேகமாய்
மழையென மண்ணில் விழுகின்றபோது
தூயநிறத்தில் துளிர்கின்றது
மானுட வாழ்வும் பிறர்கென வாழ
மழை நீர் போல தூயதாய்
மாறி ஜொலிக்கும் தானே
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!