தண்ணீர் விட்டா வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக்
கண்ணீரால் காத்தோம்! (சுதந்திரப் பயிர்)
பஞ்சமும் நோயும் நின் மெய்யடி யார்க்கோ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ? (சுதந்திர தாகம்)
விண்ணில் இரவிதனை விட்டுவிட்டு எவரும்போய்
மின்மினி கொள்வாரோ?
மண்ணில் இன்பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
மாண்பினை இழப்பாரோ?
மகாகவி பாரதியார்