சுமைகள் பலவே
சுமப்பார் நமக்காய்
குமைகள் அனைத்தும்
களைவார் – அமைதியாய்
சிந்தனைச் செய்துநன்கு
சோதித்துப் பார்த்தால்நம்
தந்தையே மேலானத் தாய்!
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com
பொருள்
நாம் நலமுடன் வாழ பல சுமைகளை தாங்கி, பல துன்பங்கள் நம்மை அண்டவிடாமல் தாமே பொறுத்து, நமக்கு நல்லதே செய்திடுவார் தந்தை. நன்கு சிந்தனை செய்து பார்த்தால் தந்தையானவர் பெற்றெடுத்த தாயை விட மேலானவராய் உள்ளார்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!