தனிநபர் விளையாட்டுகளின் வகைகள்

தனிநபர் விளையாட்டுகளின் வகைகள் 12 உள்ளன. அத்தனையும் தனி ஒருவருக்குத் தருகின்ற சிறப்பு வாய்ப்புக்களாகும். அவை பற்றித் தெரிந்து கொள்வோம்.

1.ஓடுகளப் போட்டிகள் (Athletic Sports)

தாண்டும் போட்டி
தாண்டும் போட்டி

உதாரணம்:  ஓடும் போட்டிகள், தாண்டும் போட்டிகள் மற்றும் எறியும் போட்டி நிகழ்ச்சிகள் முதலியன.

2. பனிச்சறுக்குப் போட்டிகள் (Snow & Ice Sports)

பனி கோல்ப்பனி கோல்ப்

உதாரணம்: பனிச்சறுக்குப் போட்டி, பனிமீது படகோட்டல், பனி கோல்ப் போன்ற ஆட்டங்கள்.

3. நீர்ப் போட்டிகள் (Water Sports)

சிறுபடகு விடுதல்சிறுபடகு விடுதல்

உதாரணம்: நீச்சல், அழகாகத்தாவி முக்குளித்தல் (Diving) சிறுபடகு விடுதல், தோணிவிடுதல் முதலியன.

4. குதிரை மீதமர்ந்து போட்டிகள் (Equestrian Sports)

குதிரைப்பந்தயம்குதிரைப்பந்தயம்

உதாரணம்: குதிரைப்பந்தயம், போலோ, குதிரைத் தாண்டல்கள் முதலியன.

5. வேட்டைப் போட்டிகள் (Blood Sports)

புலிவேட்டை புலிவேட்டை

உதாரணம்: நரிவேட்டை, புலிவேட்டை மான்வேட்டை போன்றவை.

6. ஆடுகளப் போட்டிகள் (Field Sports)

டென்னிஸ்டென்னிஸ்

உதாரணம்: ஒற்றையர் ஆட்டப்போட்டிகள் பூப்பந்தாட்டம், இறகுப்பந்தாட்டம், டென்னிஸ், கேரம் மற்றும் மான் விரட்டும் போட்டி, மலையேற்றம் முதலியன.

7. துவந்தப்போட்டிகள் (Combat Sports)

குத்துச்சண்டைகுத்துச்சண்டை

உதாரணம்: குத்துச்சண்டை, மல்யுத்தம், ஜீடோ, கராத்தே, கத்திச்சண்டை போன்றவை.

8. குறியோடு எய்யும் போட்டிகள் (Target Sports)

துப்பாக்கிச் சுடுதல்துப்பாக்கிச் சுடுதல்

உதாரணம்: வில்வித்தை, மண்புறா சுடுதல், துப்பாக்கிச் சுடுதல் போன்றவை

9. வான்வெளிப் போட்டிகள் (Air Sports)

பலூன்மூலம் பறத்தல்பலூன்மூலம் பறத்தல்

உதாரணம்: பாராசூட் பறத்தல், பலூன்மூலம் பறத்தல், சறுக்கி விழுதல் போன்றவை.

10. மோட்டார் ஓட்டும் போட்டிகள் (Motor Sports)

மோட்டார் வேகமாக ஓடும் போட்டிகள்மோட்டார் வேகமாக ஓடும் போட்டிகள்

உதாரணம்: மோட்டார் வேகமாக ஓடும் போட்டிகள், சைக்கிள் மோட்டார் போட்டிகள் முதலியன.

11. சீருடற்பயிற்சி போட்டிகள் (Gymnastic Sports)

ஜிம்னாஸ்டிக்ஜிம்னாஸ்டிக்

உதாரணம்: குட்டிக்கரணம் அடித்தல், கம்பி மீதாடும் போட்டிகள் துள்ளும் பாய் போட்டிகள் (Trampolining)

12. பல்வகைப் போட்டிகள் (Miscellaneous Racing Sports)

மராத்தான் போட்டிமராத்தான் போட்டி

உதாரணம்: சைக்கிள் போட்டி, புறாப்போட்டி, நடைப் போட்டி, முயல் ஓட்டப் போட்டி, நாய் ஓட்டப்போட்டி முதலியன.

மனிதர்கள் தங்களுக்கிடையேமட்டும் போட்டிகள் நடத்தி மகிழ்வதுடன் நின்றுவிடாமல், குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், புறாக்கள், நாய்கள், பன்றிகள், சுண்டெலிகள், கரப்பான்பூச்சிகள், நத்தைகள், இவைகளுக்கிடையே போட்டிகள் நடத்தியும் மகிழ்ந்து வந்திருக்கின்றார்கள்.

மிருகங்கள் மட்டும் அவர்கள் இலக்காக இல்லாமல், எந்திரங்களையும் முனைப்பாக வைத்து ஆடுவதில் மும்மரமாக இருந்திருக்கின்றனர்.

ரதங்கள், பலூன்கள், ஏரோபிளேன்கள், மோட்டார் சைக்கிள்கள், கார்கள், சைக்கிள்கள், பலவித வடிவம் உள்ள படகுகள், மற்றும் உருளையிலிருந்து போட்டிகள் போன்றவற்றில் உயிர் போனாலும் பரவாயில்லை. போட்டிதான் பிரதானம் என்ற அளவிலே போட்டியிட்டு மகிழ்ந்திருக்கின்றனர்.

ஆகவே அர்த்தமுள்ள விளையாட்டுக்கள் எல்லாம் தனிப்பட்ட மனிதரின் திறமையை வளர்க்க, வெளிப்படுத்த, திறமையுள்ளவர்களோடு போட்டியிட்டுத் தமது திறமையை தெரிந்து கொள்ள உதவுகின்றன.

மேலும் இவை புதுஉத்திகளுடன் பெருக்கிக்கொள்ள எவ்வளவு முடியும் என்று தமது திறமையின் எல்லை காண உதவின. உற்சாகம் ஊட்டின.

தனிநபர் விளையாட்டுகளின் வகைகள் பற்றித் தெரிந்து கொண்டோம்.

இத்தகைய பெருமை மிக்க விளையாட்டுக்களில் பங்கு பெறுவோர் பெறுகின்ற பயன்கள். பண்பாடுகள், புத்திசாலித்தனங்கள், பேரின்பச் சூழல்கள் பற்றி இனிவரும் தலைப்புகள் மூலமாக நாம் தெரிந்து கொள்வோம்.

அர்த்தம் புரியாமல் விளையாட்டுக்கள்பற்றி அனர்த்தமாகப்பேசும் அப்பாவி அறிவிலிகள், இனிமேலாவது புரிந்துகொண்டு, தாங்களும் விளையாட்டுக்களில் பங்குபெற்று, பலருடன் பழகி, இன்பமயமான சூழ்நிலைகளில் வதிந்து, வாழ்வில் பெறும்பேறுகள் அனைத்தும் பெறவிரும்புகிறோம். வாழ்த்துகிறோம்.

எஸ்.நவராஜ் செல்லையா

எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள்

ஒரு மிகச் சிறந்த உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் தமிழ் எழுத்தாளர் ஆவார். (பிறப்பு 1937 – இறப்பு 2001)

இவர் விளையாட்டு, உடற்பயிற்சி, உடல்நலம், விளையாட்டுத் துறை (ஆங்கிலம் தமிழ்) அகராதி உள்ளிட்ட 27 நூற்களை எழுதியுள்ளார். இவரின் நூல்களை 2010 -2011 இல் தமிழ் நாடு அரசு நாட்டுடைமை ஆக்கியது.

முதன் முதலாக விளையாட்டுத்துறை பற்றி ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர்.

விளையாட்டுக் களஞ்சியம் மாத இதழை 1977 முதல் வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.