இந்த தனிமைபடுதல் காலத்திற்கு தேவையான கதை ருஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகாவின் “பந்தயம்”.
இருவருக்கிடையில் ஒரு விவாதம் தொடங்கியது. அந்த விவாதம் எது கொடுமையான தண்டனை என்பதாக இருந்தது.
தூக்கு மற்றும் ஆயுள் தண்டனை இரண்டில், தனிமையான ஆயுள் தண்டனை என்பது தான் மிக கொடுமை. அது யாராலும் இயலாது என வாதிட்டார் ஒருவர்.
பின்பு இரண்டு நபர்கள் பந்தயம் வைத்தார்கள்.
ஒரு அறையில் யாருடனும் பேசாமல் தனிமையில் 15 ஆண்டுகள் இருந்தால், மற்றொரு நண்பர் அவருக்கு 20 கோடி பணம் ரொக்கமாக கொடுக்க வேண்டும் என்ற பந்தயம் துவங்கியது.
ஒரு தனிமையான வீட்டில் இரண்டாவது நண்பர் அடைத்து வைக்கப்பட்டார். போட்டியாளர் மிகவும் இளைஞர்.
அவர் அந்த பந்தய பணத்திற்கு ஆசைபட்டு அந்த கடுமையான போட்டியை ஒத்துகொண்டார்.
அவருக்கு நேரத்துக்கு உணவு மற்றும் புத்தகங்கள் கொடுக்கப்பட்டன. ஒயினும் இசைக்கருவிகளும் தரப்பட்டன.
ஆனாலும் ரொம்ப கஷ்டமாக இருந்தது. அவர் பந்தயத்தில், அதாவது தனிமையின் வேதனையை தாங்க முடியாமல், அங்கேயும் இங்கேயும் அறைக்குள் ஓடினார்; அழுதார்.
பின்பு காதல், கொலை போன்ற புத்தகங்கள் தரப்பட்டன. ஆனால் அவர் இலக்கியம், வரலாற்றுப் புத்தகங்களை கேட்டு வாங்கிப் படித்தார்.
சிறிது காலத்திற்கு பின் இளைஞர் புகை பிடிப்பதை முற்றிலும் தவிர்த்தார். ஒயின் குடிப்பதனால் சிந்தனைகள் மாறும் என்பதால் அதையும் தவிர்த்தார்.
புதிய இலக்கியம், வரலாறு, ஆன்மிக புத்தகத்தில் மிகவும் லயித்து போனார். காலங்கள் ஓடியது. ஆனால் பந்தயம் முடிய இன்னும் கொஞ்ச வருடங்கள் இருக்கிறது.
அந்த நேரத்தில் அவரது தனிமையான மனதில் ஒரு அமைதி புதிதாக தோன்றியது. சமாதானமான நிலையை உணர்ந்தார். தியான சூழலில் தனிமையை தொடர்ந்தார்.
பந்தயத்தின் கெடு முடிய இன்னும் ரெண்டு நாள் தான் இருந்தது. அந்த பந்தயத்தை ஒத்துக் கொண்ட முதலாவது நண்பருக்கு பயம் வந்தது.
காரணம், அவருடைய வியாபாரத்தில் பெருத்த நஷ்டம் உண்டாகி அவர் கையில் பணமே இல்லை.
நண்பர் பந்தயத்துல ஜெயித்து விட்டால் அவருக்கு எப்படி பணத்தை கொடுக்க முடியும்? என்ன பண்ணலாம்? என்று சிந்தித்தவர், நண்பரை சுட்டுக் கொன்று விடலாம் என முடிவெடுத்தார் நண்பர்.
அடைத்து வைத்திருந்த வீட்டுக்கு போனார். அந்த அறையில் நண்பர் இல்லை. கெடு முடிவதற்கு முந்தைய நாள் அவர் வீட்டை விட்டுப் போய் விட்டார்.
அவர் இருந்த அறையில் ஒரு கடிதம் எழுதப்பட்டு இருந்தது.
அதில் இவ்வளவு நாளும் தனிமையாய் இருந்தபோது நான் கடவுளுடன் நெருக்கமாய் இருந்தேன்.
இந்த உலகம் தராத சமாதானமும் அமைதியும் எனக்கு தனிமையில் கிடைத்தது.
நம்முடைய தேவைகள் எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறதோ, அந்த அளவிற்கு நமது சந்தோஷம் அதிகரிக்கும் என்பதை தெரிஞ்சுகிட்டேன்.
எனக்கு பணம் வேண்டாம். அது எனக்கு சந்தோஷத்தை கொடுக்காது. நான் கிளம்புகிறேன். நன்றி நண்பா!
உனது பந்தயம் எனக்கு புதிய ஞானத்தை தந்தது என அந்த கதை முடிகிறது.
முனைவர் ஜி.சத்தியபாலன்
உதவி பேராசிரியர்
மதுரை மருத்துவக் கல்லூரி
மதுரை
தனிமைபடுதல் காலத்திற்கு தேவையான கதை பந்தயம். தனிமைப்படுத்தப்படும் மக்களின் துயரத்தைப் போக்கும் என்பதில் ஐயம் இல்லை.
கதை நன்றாக இருந்தது