எங்கே சென்றனன் காதலன் தானோ?
இங்கே தனிமையில் விட்டது ஏனோ?
பொங்கிய அன்பை பகிர்ந்தது வீணோ?
தங்களை நினைந்து துயில்மறந் தேனே!
இத்தனை காலம் மெய்மறந் தோமே!
இத்துணை விட்டு அகன்றது தாமோ?
சித்தமே என்மேல்வைத் திடுவாயே!
அத்தான்! நாமேஇணைந் திடுவோமே!
கண்ணால் உம்மைமயக் கிடுவேனே!
என்திசை நோக்கி விரைந் திடுவாயே!
பண்ணிசைப் பாடல்இசைத் திடுவோமே!
மீமிசை வானில்பறந் திடுவோமே!
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com