அம்மாவின் திட்டல்
பேச்சுகளில் என்
தேடல் தனிமை…
அப்பாவின் குத்தல்
பேச்சுகளில் என்
தேடல் தனிமை….
கடன் கொடுத்த
நண்பனின் காரப்
பேச்சுகளில் என்
தேடல் தனிமை…
கானல்நீர் காதலியின்
கடி பேச்சுகளில் என்
தேடல் தனிமை…
ஆறுதல் தர
இன்னொரு தாயாக
தேறுதல் செய்ய
இன்னொரு தகப்பனாக
நட்புத்தர
இன்னொரு நண்பனாக
காதல் செய்ய
இன்னொரு காதலியாக
இருந்தால்
இந்த வெட்டித்தனிமை
இனிமை தானே!
என் தேடலில் முகம்
புதைத்த தனிமை
என் விடியலையும்
தேடிக் கொண்டிருக்கிறது
இப்போது
ரோகிணி