தப்பிப் போக வழியுண்டா?

ஜன்னல் கம்பிகளின் ஊடே ஊடுருவும்
சூரிய ஒளிக் கீற்றுகள்

அதற்குக் கிஞ்சிற்றும் சளைக்காத
கண்களின் பார்வையில் தெரிகிறது
முட்டிமோதிக் கொள்ளும் சிறுசிறு துகள்கள்

சுழலும் காலத்தை
உதவாக்கரையாக்கி விட்ட நெஞ்சம்
பதைபதைக்கும் தூசித்துகள்களின்
இயல்பைக் கிரகிக்கிறது

சிக்குண்ட நினைவுகள் ஒன்றோடொன்று மோதிட
இன்றை விட்டுத் தப்பிப் போக வழியுண்டா?

ச. குரு பிரசாந்
மதுரை
கைபேசி: 9965288806
மின்னஞ்சல்: srguruprasandh111@gmail.com