பொங்கல் நாளில் தங்கும் இன்பம்
எங்கள் வாழ்வில் தொடர வேண்டும்!
கரும்பு சுவை விரும்பும் வரை…
வெறுமை இங்கு விலகும் வேளை…
தாத்தா பாட்டி அத்தை மாமா
தங்கை தம்பி செவலைக்காளை
எல்லோரும் கூடிக் கொண்டாடும்
பொங்கல் நாளில் தங்கும் இன்பம்
எங்கள் வாழ்வில் தொடர வேண்டும்
இயற்கையினை வணங்கி மகிழும்
இனிய பொங்கல் நாள் முதலாய்
இயற்கைக்கு இடையூறு தருவதை
இனியாவது தவிர்க்க வேண்டும்!
இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
மறுமொழி இடவும்