தமிழர் வீரம்!

தமிழர் வீரம் உலகில் வாழும் உயர்வாகும்
அமிழ்தில் இனிய தமிழே எங்கள் உயிராகும்

எதிலும் வெற்றி! பகைவர் நடுங்கும் தோளாளன்
சதியை தகர்த்து வாகை சூடும் தீராளன்

உதிரம் உறைய உறங்க வைக்கும் வீராளன்
அகிலம் போற்றும் தமிழர் வீரம் பாராளும்

கதைகள் பேசும் மொழிகள் கூறும் தமிழாகும்
கடலைத் தாண்டி பெருமை சொல்லும் ஏராளம்

அடங்க மறுக்கும் தீயர் மாள்வர் எந்நாளும்
அடங்கி ஆள்வர் அன்பிற்கினியர் தமிழோரே!

தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com

தா.வ.சாரதி அவர்களின் படைப்புகள்