தமிழே தமிழே உனைப்போல்
வாழ ஆசை பேராசை
இன்றும் வளர் இளந்தமிழே
என்றும் தன்னேரிலாத் தமிழே
தரமான புலவர்கள் பலரை
தரணிக்கு ஈந்தாய் தமிழே
தாய்தமிழே அணிதமிழே கனிதமிழே
தருவாய் எனக்கு பெருவாழ்வு
பழமையைப் புரிந்து
புதுமையைப் போற்றி
படைப்புகள் பல நான் இயற்ற
தருவாய் எனக்கு பெருவாழ்வு
One Reply to “தமிழே”