தமிழ்க் கருவிகள் என்பது ஒரு மென்பொருள். இந்த மென்பொருள் பல தமிழ் இணையதளங்களை ஒரே பக்கத்திலிருந்து அணுகுவதற்கான வசதியான தீர்வை வழங்குகிறது.
அதனை வள்ளுவர் வள்ளலார் வட்டம் என்ற நார்வேயில் உள்ள தன்னார்வலர் அமைப்பு உருவாக்கியுள்ளது.
அவர்களிடமிருந்து விலை கொடுத்து வாங்கி, உலகத் தமிழர்களுக்கு வெண்பா அங்காடி இலவசமாக வழங்குகிறது.
இந்த மென்பொருள் google chrome-ல் இருக்கும் புக்மார்க் போன்றது.
இதன் மூலம் உலகில் உள்ள பல மூலைகளில் உருவாக்கப்பட்ட சிறந்த தமிழ் செயல்பாடுகளை உடைய கருவிகளை இணைக்க முயற்சித்துள்ளோம்.
எல்லாராலும் எல்லாவற்றையும் நினைவில் வைத்துக்கொள்ள இயலாது. சில நேரங்களில் நாம் சேமிக்க மறந்து விடுவோம். இவை அனைத்திற்கும் ஒற்றைத் தீர்வாக இந்த மென்பொருள் அமையும்.
இது கிட்டத்தட்ட மைக்ரோசாப்ட் ஆபீஸ் போல இருக்கும். இந்த மென்பொருள் ஒரே சொடுக்கில் 120 தமிழ் இணையதள செயல்பாடுகளை அணுக உதவும்.
கல்வி, அகராதி, ஆய்வுக் கட்டுரை, இணையதளம், இலக்கியம், உரை ஒலி மாற்றி, ஒலி உரை மாற்றி, உரையாடி, எழுத்துப் பெயர்ப்பு, எழுத்துரு, கருவிகள், சொல்லாய்வு, அங்காடி, தட்டச்சு, மொழிபெயர்ப்பு போன்றவற்றவை பயன்படுத்த உதவுகிறது.
வேற ஏதும் பயனுள்ள இணையதளங்களை, இதில் இணைக்கலாம் என்று பரிந்துரைக்க விரும்பினால் பரிந்துரையுங்கள்.
இந்த மென்பொருளைப் பயன்படுத்துவதில் பாதுகாப்பு சிக்கல்கள் எதுவும் இல்லை.
மூன்றாம் தரப்பு பக்கங்களில் ஏதேனும் சிக்கல்களைச் சந்தித்தால், அருள்கூர்ந்து எங்களுக்குத் தெரிவித்து உதவவும்.
எங்கள் மென்பொருளிலிருந்து தொடர்புள்ள இணைப்புகளை நீக்குவதன் மூலம், அவற்றை உடனடியாகச் சரி செய்யலாம்.
ஓரிரு நாட்களில், இது இலவச ஆண்ட்ராய்டு செயலியாக வெளியிடப்படும்.
Please download from the Microsoft Store. குறிப்பு: Windows OSல் மட்டுமே செயல்படும்.
எங்களால் முடிந்ததை செய்து விட்டோம். இது அனைவருக்கும் பயன்பட, அனைவரிடம் கொண்டு செல்ல வேண்டியது, உங்கள் அனைவரின் பொறுப்பு.
நன்றி
இவண்
இங்கரசால்
வள்ளுவர் வள்ளலார் வட்டம்
நார்வே
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!