தமிழ்த் திருமண முறை பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

தமிழ்த் திருமண முறை என்ற  இக்கட்டுரை,  மணமக்களுக்கு  என்னும்  நூலில் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் கூறிய திருமண முறை ஆகும். 

நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் M.A., B.L., அவர்களும், தமிழ்த் தென்றல் திரு. வி.கலியாண சுந்தரம் அவர்களும், இம்முறை வழியாகத் திருமணம் நடத்தி வைப்பதில் முன்னோடிகளாக இருந்தனர்.

நாமும் தமிழ்த் திருமண முறை பற்றித் தெரிந்து கொள்வோமே!

 

தமிழ்த் திருமண முறை

1. தமிழ்த் தாய் வாழ்த்து – இறைவணக்கம்

2. திருமணத்தை நடத்தி வைக்கத் தலைவரை வேண்டுதல்

3. தலைவர் முன்னுரை

4. மணமகனுக்குத் தாய்மாமன் மலர்மாலை அணிவித்தல்

5. மணமகன் பெற்றோர் திருவடிகளில் சந்தனம், மலர் வைத்து வணங்கி எழுதல்

6. மணமகள் பெற்றோரின் திருவடிகளில் சந்தனம் மலர் வைத்து வணங்கி எழுதல்

7. மணமகன் உறுதிமொழி :

 

‘தாய்மார்களே!  பெரியோர்களே! தங்கள் எல்லோர் முன்னிலையிலும் என் அருகிலுள்ள திருச்செல்வி ……………….யை நான் இன்று என் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொள்கிறேன்.

வாழ்விலும் தாழ்விலும், இன்பத்திலும் துன்பத்திலும் உடனிருந்து, சம உரிமை வழங்கி, வள்ளுவர் நெறி நின்று, இல்லறத்தை இனிது நடத்துவேன் என உங்கள் முன்பு உறுதி கூறுகிறேன்.

 

8. மணமக்கள் பெற்றோரின் திருவடிகளில் சந்தனம், மலர் வைத்து வணங்கி எழுதல்

9. மணமகள் உறுதிமொழி :

‘யானும் அவ்வாறே உறுதி கூறுகிறேன்’

 

10. தேங்காய் பழத்தட்டு ஒன்று மங்கல நாணுடன் பெரியோரின் வாழ்த்துக்காகச் சென்று வருதல்

11. உதிரிப் பூக்களை மணமக்களை வாழ்த்துவதற்காகத் தாய்மார்களுக்கும் பெரியோர்களுக்கும் வழங்குதல்.

12. திருப்பூட்டுதல்

13. வயது முதிர்ந்த பெண்களில் சிலர் மணபெண்ணின் மங்கல நாணில் சந்தனம், குங்குமம் வைத்து வாழ்த்துதல்

14. வயது முதிர்ந்த ஆண்களில் சிலர் மணமக்களுக்குத் திருநீறு இட்டு வாழ்த்துதல்

15. மணமகனுக்கு மைத்துனன் மோதிரம் அணிவித்தல்

16. மைத்துனனுக்கு மரியாதை செய்தல்

17. மணமக்கள் மாலை மாற்றிக்கொண்டு மாறி உட்காருதல்

18. சர்க்கரையை மணமக்களுக்கு வழங்கி, மற்றவர்களுக்கும் வழங்குதல்

19. நல்ல அறிஞர் சிலர் மணமக்களுக்கு வாழ்த்துரை வழங்குதல்

20. தலைவர் முடிவுரை

21. மணமக்களைப் பொன்னாலும் பொருளாலும் வாழ்த்தி, பாலும் பழமும் கொடுத்தது அனுப்புதல்.

முத்தமிழ் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம்

 

மேற்கூறிய தமிழ்த் திருமண முறை அறிந்து கொண்டு எல்லோரும் அம்முறையைப் பின்பற்றி திருமணத்தை நடத்தி வளமான வாழ்வு வாழ்வோம்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.