தமிழ்நாடு நிலத் தோற்றங்கள் பற்றி அறிவோம்

இயற்கை அமைப்பின் அடிப்படையில் தமிழ்நாடு நிலத் தோற்றங்கள் நான்கு பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளன.

அவை

1. மலைகள்

2. பீடபூமிகள்

3. சமவெளிகள்

4. கடற்கரைப்பகுதிகள்

மலைகள்

தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலைகள் என இருபெரும் மலைகள் இருக்கின்றன. இவை தமிழ்நாட்டின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் அமைந்து உள்ளன.

இவ்விரு மலைகளும் நீலகிரியில் ஒன்றாகச் சேர்ந்து விடுகின்றன. இங்கு அமைந்துள்ள உயரமான சிகரம் தொட்டபட்டா. இதனுடைய உயரம் 2642மீ ஆகும். முக்கிய மலைவாழிடங்களான உதகமண்டலம், குன்னூர் மற்றும் கோத்தகிரி இங்கு அமைந்துள்ளன.

மேற்குத் தொடர்ச்சி மலைகள்

மேற்குத் தொடர்ச்சி மலைகள்
மேற்குத் தொடர்ச்சி மலைகள்

 

மேற்குத் தொடர்ச்சி மலைகள் தமிழ் நாட்டில் வடக்கில் நீலகிரியிலிருந்து தெற்கில் கன்னியாகுமரி வரை பரவியுள்ளன. இது தமிழ்நாட்டின் மேற்கு எல்லையாக அமைந்துள்ளது.

இம்மலைகளின் சராசரி உயரம் 1200மீ ஆகும்.

இம்மலைத்தொடரில் நீலகிரிக்குத் தெற்கே பாலக்காடு கணவாய் (35கிமீ அகலம்) அமைந்துள்ளது.

 

பாலக்காடு கணவாய்
பாலக்காடு கணவாய்

 

இதன் வழியாக மேற்கிலுள்ள கொச்சி, கள்ளிக்கோட்டை ஆகிய பகுதிகளுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாணிப வழியாகவும் இது உள்ளது.

பாலக்காட்டு கணவாய்க்குத் தெற்கில் இம்மலைத்தொடரில் ஆனைமலை என்னும் இடத்தில் உயரம் (2700மீ) அதிகரிக்கிறது.

 

ஆனைமலை
ஆனைமலை

 

இதிலிருந்து பிரிந்து பழனி மலைகள் கிழக்கில் செல்கின்றன. தமிழ்நாட்டின் முக்கிய கோடை வாழிடமான கொடைக்கானல் இங்கு அமைந்துள்ளது.

 

பழனிமலைகள்
பழனி மலைகள்

 

பழனி மலைகளுக்குத் தெற்கே ஏலக்காய் மலைகள் உள்ளன. இங்கு புகழ்மிக்க தேக்கடி சரணாலயம் பெரியாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

 

ஏலக்காய் மலைகள்
ஏலக்காய் மலைகள்

 

அதன் பின்னர் தெற்கில் இம்மலைகள் வருசநாடு மற்றும் அகத்தியர் மலைகள் என்ற பெயர்களோடு தொடர்ந்து செல்கின்றன.

 

அகத்தியர் மலைகள்
அகத்தியர் மலைகள்

 

செங்கோட்டை கணவாய்க்குத் தெற்கே மேற்கு தொடர்ச்சி மலைகள் பொதுவாக உயரம் குறைந்து கொண்டே கன்னியாகுமரி வரை செல்லுகின்றன.

பாலக்காடு கணவாய், செங்கோட்டை கணவாய் மற்றும் ஆரல்வாய் கணவாய் ஆகியவை கேரளாவை தமிழ்நாட்டுடன் இணைக்கின்றன.

கிழக்குத் தொடர்ச்சி மலைகள்

கிழக்குத் தொடர்ச்சி மலைகள்
கிழக்குத் தொடர்ச்சி மலைகள்

 

தக்காண பீடபூமியின் கிழக்கு எல்லையாக கிழக்குத் தொடர்ச்சி மலைகள் உள்ளன. இவை மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் போன்று தொடர்ச்சியாக இல்லை. அவை பல இடங்களில் சிறுமலைகளாக அமைந்துள்ளன.

இந்த மலைகள் வடக்கிலிருந்து தெற்காக அமைந்திருப்பதுடன் உள்நாட்டை நோக்கி தள்ளி அமைந்துள்ளன.

இம்மலைகளின் சராசரி உயரம் 600மீ ஆகும்.

கிழக்குத் தொடர்ச்சி மலையின் வட்டாரப் பெயர்கள், அவை அமைந்துள்ள மாவட்டங்கள்

 

ஜவ்வாது மலை, ஏலகிரி மலை – வேலூர் மாவட்டம்

ஜவ்வாது மலைஜவ்வாது மலை

 

சேர்வராயன் மலை – சேலம்

சேர்வராயன் மலைசேர்வராயன் மலை

 

கல்வராயன் மலை – விழுப்புரம்

கல்வராயன் மலைகல்வராயன் மலை

 

பச்சை மலை – திருச்சிராப்பள்ளி

பச்சை மலை
பச்சை மலை

 

கொல்லி மலை – நாமக்கல்

கொல்லி மலைகொல்லி மலை

 

சித்தேரி மலை – தருமபுரி

செஞ்சி மலை – விழுப்புரம்

பீடபூமிகள்

தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் இடையில் உயரம் குறைவான பரந்த பீடபூமி உள்ளது.

கிழக்கில் 150மீ முதல் மேற்கில் 450மீ வரை பீடபூமி உயர்ந்து செல்கின்றது. தமிழ்நாட்டில் பீடபூமியானது வடமேற்கிலிருந்து தென்கிழக்காகச் சரிந்துள்ளது.

அதனால் இங்கு பெரும்பாலான ஆறுகள் வடமேற்கிலிருந்து தென்கிழக்காகப் பாய்கின்றன.

கோயமுத்தூர் பீடபூமி

தர்மபுரி பீடபூமி அல்லது பாராமஹால் பீடபூமி

மதுரை பீடபூமி

ஆகியவை தமிழ்நாட்டின் முக்கிய பீடபூமிகள் ஆகும்.

கோயமுத்தூர் பீடபூமி

நீலகிரியிலிருந்து தர்மபுரி வரையிலும் உள்ள பகுதிக்கு கோயமுத்தூர் பீடபூமி என்று பெயர். இதில் கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்கள் அமைந்துள்ளன.

காவிரியும் அதன் துணை ஆறுகளான பவானி, நொய்யல் மற்றும் அமராவதி ஆகியன இப்பகுதியில் ஓடுகின்றன.

தர்மபுரி பீடபூமி

பாலாற்றுக்கும் காவிரிக்கும் இடையில் உள்ள பகுதிக்கு தர்மபுரி பீடபூமி அல்லது பாராமஹால் பீடபூமி என்று பெயர்.

பாலாறு, பெண்ணையாறு ஆகியன இப்பகுதியில் ஓடுகின்றன.

மதுரை பீடபூமி

மதுரைக்கும், கன்னியாகுமரிக்கும் இடையில் உள்ள பகுதி மதுரை உயர்நிலம் அல்லது மதுரை பீடபூமி என்று அழைக்கப்படுகிறது.

இங்கு வைகை, தாமிரபரணி ஆறுகள் ஓடுகின்றன.

சமவெளிகள்

தமிழ்நாட்டில் சமவெளிகள் வடக்கு சமவெளி, காவிரி டெல்டா, தெற்கு சமவெளி என்னும் மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது.

வடக்கு சமவெளி

வடக்கு சமவெளியில் சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் அமைந்துள்ளன. இச்சமவெளியின் உயரம் 150மீ, அகலம் 100கிமீ.

இது வங்காள விரிகுடாவை நோக்கிச் சரிந்துள்ளது.

பாலாறு, பெண்ணையாறு, செய்யாறு ஆகியன இப்பகுதியின் முக்கிய ஆறுகளாகும்.

காவிரி டெல்டா

நாகபட்டிணம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் காவிரி டெல்டா அமைந்துள்ளது. காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆகிய ஆறுகள் இப்பகுதியில் ஓடுகின்றன.

காவிரி டெல்டாவின் தலைப்பகுதி ஸ்ரீர ங்கத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இங்கிருந்துதான் காவிரியின் மிகப்பெரிய கிளையாறான கொள்ளிடம் பிரிகின்றது.

இப்பகுதிதான் மாநிலத்தின் வளமிக்க பகுதியாகும். குடியிருப்புகள், நாகரீகம் தோன்றிய பகுதியாகவும் உள்ளது. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாகவும் உள்ளது.

தெற்கு சமவெளி

காவிரி டெல்டாவிற்குத் தெற்கே சமவெளி ஒரு வறண்ட பகுதியாகும். வைகை, தாமிரபரணி ஆறுகள் பாயும் பகுதிகள் வளமுள்ளதாக உள்ளன. தமிழ்நாட்டின் சமவெளியின் பெரும்பகுதி கிழக்காக பாயும் ஆறுகளின் வண்டலால் உருவாக்கப்பட்டது ஆகும்.

கடற்கரைப்பகுதிகள்

தமிழ்நாட்டில் கடற்கரைப்பகுதிகள் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளன. இக்கடற்கரைப் பகுதிக்கு சோழ மண்டலக் கடற்கரை என்று பெயர். இது ஒரு உயர்த்தப்பட்ட கடற்கரை ஆகும்.

உயர்த்தப்பட்ட பீச்சுகள், ஆழம் குறைந்த கடல், உப்பங்கழிகள், மணற்படிவுகள் ஆகியன தமிழ்நாட்டின் கடற்கரையில் சிறப்பாக அமைந்துள்ளன.

இங்கு இயற்கை துறைமுகம் இல்லை. சென்னைக்கும் நாகபட்டிணத்திற்கும் இடையில் உள்ள கடற்கரை பகுதிகளில் அடிக்கடி சூறாவளிகள் ஏற்படுவதால் உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஏற்படுகின்றன.

சென்னை, எண்ணூர், தூத்துக்குடி ஆகியவை தமிழ்நாட்டின் பெரிய துறைமுகங்களாகும்.

 

சென்னை துறைமுகம்
சென்னை துறைமுகம்

 

கடலூர், நாகபட்டிணம், இராமேஸ்வரம், குளச்சல் ஆகியவை சிறிய துறைமுகங்களாகும்.

தமிழ்நாடு நிலத் தோற்றங்கள் மலைகள், பீடபூமிகள், சமவெளிகள் மற்றும் கடற்கரைகள் என சிறந்த பலதரப்பட்ட நிலத் தோற்ற வகைகளைக் கொண்டுள்ளது.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.