தமிழ்நாட்டின் சிறப்புகள் பல உள்ளன. அவற்றில் சில.
தமிழ்நாட்டில் பேசப்படும் தமிழ்மொழி உலகில் உள்ள பராம்பரிய மொழிகளில் ஒன்றாகும்.
தமிழ்நாடு பொருளாதாரத்தில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. முதலிடம் மகாராஷ்டிரா ஆகும்.
இந்திய தேசியக் கொடியைத் தனது முத்திரையில் கொண்டுள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
இந்தியாவில் கண்டறியப்பட்ட மொத்த கல்வெட்டுக்களில் 60 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கீழ்கண்ட இடங்கள் யுனெஸ்கோவால் பாராம்பரிய நினைவுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மகாபலிபுரம்
தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம்
கங்கை கொண்ட சோழபுரம் கோவில்
தாரகாசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோவில்
நீலகிரி மலை ரயில்
மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்
1806-ல் வேலூரில் நடைபெற்ற சிப்பாய் கலகம் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக நடைபெற்ற மாபெரும் முதல் எதிர்ப்பு நிகழ்வாகும்.
தமிழ்நாடு காவல்துறையில் 12.5 சதவீதப் பெண்கள் பணிபுரிவதால் இந்தியாவில் அதிகப் பெண்களைக் கொண்ட காவல்துறையாக தமிழ்நாடு உள்ளது.
2000 ஆண்டுகள் பழமையான தமிழ் இலக்கியம் உலகில் மிகவும் தொன்மையானது.
இந்தியாவில் வாழை, மஞ்சள், மலர்கள் மற்றும் மரவள்ளிக்கிழங்கு ஆகியவற்றை அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
பக்தி இயக்கம் தமிழ்நாட்டில் தோன்றி இந்தியாவின் மற்ற இடங்களுக்குப் பரவியது.
கபடி விளையாட்டு தமிழ்நாட்டில் தோன்றியது.
உடல் உறுப்புகளின் தானத்திலும் தமிழ்நாடு, இந்திய அளவில் முதல் இடத்தில் உள்ளது.
சூரிய மின்னாற்றல், காற்று மின்னாற்றல் உற்பத்தியில் தமிழ்நாடு, இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவின் வாகன ஏற்றுமதியில் மொத்தம் 60 சதவீதம் தமிழ்நாட்டின் சென்னையில் நடைபெறுகிறது.
இந்தியாவின் பழமையான ஷாப்பிங் மால் சென்னையில் உள்ள ஸ்பென்சர் பிளாஸா ஆகும்.
சென்னையின் கோயம்பேடு பேருந்து நிலையம் ஆசியாவில் மிகப்பெரியது ஆகும்.
வண்டலூர் உயிரியல் பூங்கா இந்தியாவில் பரப்பரளவில் மிகப்பெரியது மற்றும் முதல் பொது விலங்குப் பூங்காவாகும்.
உலக சுகாதார நிறுவனம் அடையாறு புற்றுநோய் நிறுவனத்தை நாட்டின் உயர்தர நிறுவனமாக அறிவித்துள்ளது.
சென்னையின் கத்திப்பாறா சந்திப்பு ஆசியாவின் மிகப்பெரிய க்ளோவர்லீஃப் ஃப்ளையோவர் பாலம் ஆகும்.
மெரினா கடற்கரை நீளமான இயற்கையான நகர்புற கடற்கரை ஆகும்.
உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி மின்னாற்றல் தயாரிக்கும் அமைப்பு தமிழ்நாட்டின் கமுதியில் அமைந்துள்ளது.
தமிழ்நாடு இந்தியாவில் அதிகளவு ஜனாதிபதிகளைக் கொடுத்துள்ளது. சர்வப்பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன், வெங்கட்ராமன், டாக்டர் ஏ.பி.ஜேஅப்துல் கலாம்.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இந்தியாவின் பழமையான நீர்பறவைகள் சரணாலயம் ஆகும்.
இந்தியாவில் உள்ள பூக்கும் தாவரங்களில் 24 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளன.
இந்தியாவின் மிகப்பெரிய ரோஜாத் தோட்டம் ஊட்டியில் உள்ளது. இங்கு 22000 வகையான பூக்கள் காணப்படுகின்றன.
முதல் மூன்று பாரத ரத்னா விருதுகளைப் பெற்றவர்கள் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள். சர்.சி.வி.ராமன், ராஜாஜி, சர்வப்பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆவர்.
உலகின் புகழ்பெற்ற கணிதவியலாளரான சீனிவாச ராமானுஜம் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்.
1914-18-ல் நடைபெற்ற முதல் உலகப்போரில் சென்னை நகரம் ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி ஆகிய அதிக வெளிநாட்டவர்களால் தாக்கப்பட்டது.
திருக்குறள் உலகில் அதிகளவு மொழி பெயர்க்கப்பட்ட மதசார்பில்லாத நூலாகும். இது உலகப் பொதுமறை என்று வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு இந்தியாவின் மூன்று கடல்களால் சூழப்பட்டுள்ளது.
பாம்பன் பாலம் இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும். மேலும் இது இந்தியாவின் இரண்டாவது பெரிய நீளமான பாலம் ஆகும்.
கிண்டி பொறியியல் கல்லூரி இந்தியாவில் உள்ள பழமையான தொழில்நுட்ப கல்லூரிகளில் ஒன்று. 1794-ல் கணக்கெடுப்பு பள்ளியாக ஆரம்பிக்கப்பட்ட இது 1859-ல் கல்லூரியாக மாற்றப்பட்டது.
சென்னை மாநகராட்சி தொடங்கப்பட்டு 365 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. இது லண்டனுக்கு அடுத்தபடியான உலகிலேயே இரண்டாவது பழமையான மாநகராட்சியாகும்.
சென்னை இந்தியாவின் சுகாதாரத் தலைநகராக விளங்குகிறது. சென்னை மருத்துவமனைகள் ஒவ்வொரு நாளும் 150 வெளிநாட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கின்றன.
கோயமுத்தூரில் உள்ள சிறுவாணி ஆற்றுநீரானது உலகின் சுவைமிக்க நீராகும். சிறுவாணி என்பது பவானி ஆற்றின் கிளைநதியாகும்.
தமிழ்நாட்டின் சிறப்புகள் பற்றி அறிவோம். மற்றவர்களும் அறியும் வண்ணம் செய்வோம்.
This essay is encouraging our Tamil language and Tamil Nadu.