தமிழ் இதழியலில் கேள்வி பதில்

தமிழ் இதழியலில் கேள்வி பதில் பற்றிய ஒரு பிளாஷ்பேக்

மதர் இந்தியா, பிலிம் இந்தியா ஆங்கில பத்திரிகைகளில் இடம்பெற்ற எளிய ஆங்கிலத்தில் தரப்பட்ட ஆசிரியர் பாபுராவ் பட்டேல் அவர்களின் கேள்வி பதில் பகுதி இந்திய வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

தமிழ் பத்திரிகை உலகில் சுவாரஸ்யமான கேள்வி பதில் பகுதியை தமிழ்வாணன் தமது கல்கண்டு இதழில் தொடங்கி வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அதற்கு முன்பாக, குண்டூசி கோபால், தமது குண்டூசி இதழில் வாசகர்களின் கேள்விகளுக்கு சுவையான பதில்களை அளித்து வந்தார்.

கவியரசர் கண்ணதாசன், தாம் ஆசிரியராக இருந்து நடத்தி வந்த தென்றல், கண்ணதாசன் ஆகிய இலக்கிய இதழ்களில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

சோ, 70 ஆம் ஆண்டு தொடங்கிய துக்ளக் இதழில் கேள்வி பதில் பகுதி மூலம் தமது கருத்துகளை கூறினார்.

இப்படியாக, தமிழ் இதழ் உலகில், சிறிய பத்திரிகை, சினிமா பத்திரிகை, பெரிய பத்திரிகை, நாளிதழ் இணைப்பிதழ், அரசியல் சார்ந்த ஏடுகள் , சிற்றிதழ், இலக்கிய இதழ், வானொலி நிகழ்ச்சிகள் என எல்லா பத்திரிகைகளிலும் கேள்வி பதில் பகுதி முக்கியமாக இடம் பெற்றது.

கலைமகள் இலக்கிய இதழில், விடையவன் என்ற பெயரில் அறிஞர் கி.வா.ஜெகந்நாதன், இலக்கியம் பற்றிய கேள்விகளுக்கு விடையளித்தார்.

குமுதம் இதழில் அரசு பதில்கள். ஆனந்த விகடனில் மதன் பதில்கள் வலம் வந்தன.

முதுபெரும் எழுத்தாளர் சுஜாதா, தொண்ணூறுகளில் ஜுனியர் விகடன் இதழில் ஏன் எதற்கு எப்படி என்ற தலைப்பில் வாசகர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார். இந்த கேள்வி பதில்கள், ஏன் எதற்கு எப்படி என்ற விகடன் பிரசுரம் நூலாக வெளிவந்திருக்கிறது.

தமிழ் இதழியலில் கேள்வி பதில் பகுதி இன்றும் தொடர்கிறது.

மதுரகவி சீனிவாசன்
சென்னை
கைபேசி: 9841376382
மின்னஞ்சல்: mkavi62@gmail.com

Comments

“தமிழ் இதழியலில் கேள்வி பதில்” மீது ஒரு மறுமொழி

  1. […] தமிழ் இதழியலில் கேள்வி பதில் காந்தப்புரா […]

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.