தமிழ் பிள்ளைத் தமிழ் நூல், தமிழ் மொழி வரலாற்றிலேயே முதல் முதலாகத் தமிழ் மொழியைக் குழந்தையாகப் பாவித்து, மரபு இலக்கண முறைப்படி எழுசீர் ஆசிரிய விருத்தத்தில் எழுதப்பெற்ற பிள்ளைத்தமிழ் நூல் ஆகும்.
கீழ்க்கண்ட இணைப்பில் இணையத்தில் இலவசமாகப் படிக்கக் கிடைப்பது இந்நூலின் இன்னொரு சிறப்பாகும்.
https://drive.google.com/file/d/1HzjTsZnXVR3uZHT0obw9_2s1qTAa_NGX/view?usp=drivesdk
‘கண்ணே மணியே’ என்று வழக்கமாகப் பாடப்பெறும் பெண்பாற் பிள்ளைத் தமிழுக்குரிய 10 பருவங்கள் இந்நூலில் வித்தியாசமான முறையில் உள்ளன.
இந்த 10 பருவம் போகப் புதிதாக இக்காலதிற்கேற்ப கணினி மற்றும் செம்மொழி என்ற 2 புதுப்பருவங்கள் சேர்க்கப் பெற்றுள்ளன.
செம்மொழிப் பருவம் பட்டாபிசேகம் போல வர்ணிக்கப் பெற்றுள்ளது.
12 பருவங்களும், தமிழ் உயிரெழுத்துகள் 12ஐ நினைவூட்டுவதாக அமைந்து, அவ்வுயிரெழுத்தே அந்த 10 பாடல்களின் முதல் எழுத்தாக ஆரம்பிக்கும்படி புதுமையாக உள்ளது.
தமிழ் பிள்ளைத் தமிழ் நூல் சாதி, மத, இன வேறுபாடின்றித் தமிழின் சிறப்பையும், தமிழ்நாட்டின் சிறப்பையும், தமிழர்களின் பெருமையையும் போற்றுகிறது.
10 பருவங்களிலும் ஆங்காங்கே தமிழகத்தில் உள்ள 10 விதமான மலைகள், நீர்நிலைகள், கட்டில்கள், தொட்டில்களில் தமிழைச் சீராட்டி, 10 விதமான பறவைகள், மலர்கள், கனிகளாக வர்ணிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு.வி.திருவள்ளுவன், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் திரு.இராம.கதிரேசன், திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைத்தலைவர் திரு.இரவி, அழகப்பாப் பல்கலைக் கழக முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் திரு.மா.கண்ணப்பன், திருவாடானை அரசினர் கலைக்கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் திரு.பழனியப்பன் போன்றவர்களின் அணிந்துரை, வாழ்த்துரை, வாழ்த்து மடல் மற்றும் மதிப்புரையோடும் மணிவாசகர் பதிப்பகத்தால் பதிப்பிக்கப் பெற்று காரைக்குடி கம்பன் திருவிழாவில் தமிழறிஞர் சோம.லெ. அவர்கள் புதல்வர் சோமசுந்தரம் அவர்களால் 17.03.2022 அன்று வெளியிடப்பெற்றது.
தமிழ் பிள்ளைத் தமிழ் நூலை எழுதிய ஆசிரியர்
மெ. சண்முகம் B.Sc., B.Ed.
ஓடாப்புலி நிவாஸ் ‘2020’
94 மெ.மெ.வீதி
காரைக்குடி 630001
சிவகங்கை மாவட்டம்
கைபேசி: 9976402342, 8248748170
நூலை இணையத்தில் இலவசமாகப் படிக்க https://drive.google.com/file/d/1HzjTsZnXVR3uZHT0obw9_2s1qTAa_NGX/view?usp=drivesdk
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!