புத்தாண்டே வருக வருக! – தாய்த்தமிழ்
புத்தாண்டே வருக வருக!
புதுப்பொலிவுடன் புன்னகை பொங்க
புத்தாண்டே வருக வருக!
நோயில்லா தமிழ் புத்தாண்டாக
வலம் வருக!
வந்திருக்கும் நோயை விரட்டும்
புத்தாண்டே வருக!
பிறந்திருக்கும் புத்தாண்டு
நோயில்லா வாழ்வையும்
கவலையில்லா நாட்களையும்
மாசில்லா புகழையும்
எல்லையில்லா இன்பத்தையும்
அனைவருக்கும் அளிக்க
அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்!