தமிழ் மொழியில் பிரதமர் அலுவலக இணையதளம் www.pmindia.gov.in/ta என்ற முகவரியில் செயல்பட ஆரம்பித்துள்ளது.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் அதிகாரபூர்வ இணைய தளமான www.pmindia.gov.in இப்போது பலமொழிகளில் இயங்குகிறது. இந்த இணைய தளத்தை இப்போது தமிழ் உள்பட 6 பிராந்திய மொழிகளில் காணலாம்.
இது வரை ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டும் இயங்கி வந்த இந்த இணைய தளம் தற்போது தமிழ், வங்காளம், குஜராத்தி, மலையாளம், மராத்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் கூடுதலாக கிடைக்கிறது.
இந்த இணைய தளத்தை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி. சுஷ்மா சுவராஜ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த முன்முயற்சி, பிரதமர் திரு நரேந்திர மோடியின் முயற்சியான மக்களை அவர்கள் மொழியிலேயே சென்றடைய வேண்டும் என்பதன் வெளிப்பாடு என்றார்.
இந்த முன்முயற்சி காரணமாக நாட்டின் அனைத்து பகுதி மக்களுக்கும் பிரதமருக்கும் இடையேயான கலந்துரையாடல் அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மக்களின் நலன் மற்றும் வளர்ச்சி சார்ந்த பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த இணைய தளத்தில் அவர்கள் காணமுடியும்.
நாட்டின் பிற பிராந்தியங்களின் மொழிகளிலும் படிப்படியாக இந்த இணைய தளம் கிடைக்கும்.
புதிதாக செயல்படுத்தப்பட்டுள்ள இந்த ஆறு பிராந்திய மொழிகளிலும் இணைய தளத்தைக் காண கீழ்கண்ட சுட்டிகள் உதவும் :
தமிழ்: www.pmindia.gov.in/ta
வங்காளம்: www.pmindia.gov.in/bn
குஜராத்தி: www.pmindia.gov.in/gu
மராத்தி: www.pmindia.gov.in/mr
மலையாளம்: www.pmindia.gov.in/ml
தெலுங்கு: www.pmindia.gov.in/te