அசராத முயற்சி வெற்றி தரும்
அழகான புன்னகை தன்னம்பிக்கை தரும்
ஆசையில்லா வாழ்வு இன்பம் தரும்
ஆசை கொண்ட கல்வி பண்பு தரும்
இகழ்ச்சி இல்லா புகழ்ச்சி மகிழ்ச்சி தரும்
ஈசன் தந்த வாழ்வு ஈகை தரும்
ஈன்றவள் கொண்ட பாசம் தூய்மை தரும்
உள்ளத்தின் ஒளி உண்மை தரும்
உதவும் கரங்கள் உதவி பெறும்
ஊக்கமுள்ள எண்ணம் ஆக்கம் தரும்
ஊனமில்லா வாழ்வு உவகை தரும்
எண்ணுகின்ற எண்ணம் போல் வாழ்வு வரும்
ஏக்கம் இல்லா மனிதருக்கு தூக்கம் வரும்
ஏற்றி விடும் மனிதருக்கே ஏற்றம் வரும்
ஐயமில்லா வாழ்வினிலே வளமை வரும்
ஐந்தெழுத்தை உச்சரித்தால் ஞானம் வரும்
ஒவ்வாமை செய்யாமை நன்மை தரும்
ஒன்றாக இருப்பதுவே பெருமை தரும்
ஓதும் பணியே உயர்வு தரும்
ஓதாத பணியே அயர்வு தரும்
அவ்வை மொழி சிறப்பு தரும்
அவ்வியம் பேசாமை நன்மை தரும்
சுகன்யா முத்துசாமி