தளை – கவிதை

எண்ணத்துப்பூச்சியின்
சிதறி விட்ட வண்ணங்களைக்
கனவிலே சரி செய்து
விழித்த போது…

அதிகாலை வானம்
புதிய வண்ண உருவாக்கலில்
லயம் கண்டு கொண்டிருந்தது…

சிறுதூக்கம் கொண்டு மதியம்
விழித்த போது தொலைந்து போன
வண்ணக் கனவுகளுக்காய்
மாலை உதயமாகிக் கொண்டது

…அந்தியின் வண்ண வனப்பை
கலைத்து விடுவதற்காய்
இரவு அருகில்…

விழித்தலும் இருத்தலும் கலைத்தலும்
இதில் எது எப்போது
நிரந்தரமாய் நிரந்தரம் ஆக்கப்படும்?

பா.சுரேஷ் டேனியல்
உதவிப் பேராசிரியர்
ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி
நாகர்கோவில் –
தொலைபேசி: 9944270749
Email: sureshdanielp@gmail.com

ஆசிரியரின் மற்றொரு படைப்பு

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.