தள்ளுபடி – படிப்பது எப்படி? – பாகம் 2

தள்ளுபடி எப்படி உங்களைப் படிக்க வைக்கும் என நீங்கள் மலைக்கலாம். வெற்றிப் படிகளில் ஏறத் தொடர்ந்து படியுங்கள்!

நி​னைப்பவர்கள் அல்ல; நடப்பவர்கள் மட்டு​மே இலக்கை ​சென்ற​டைய முடியும்.

என்ன படிக்க ஆரம்பித்து விட்டீர்களா?

எப்படி ஆரம்பிப்பது என்கிற எண்ணம் வருகிறது அல்லவா!

நீங்கள் படிப்பது ​தேர்வுகளில் நல்ல மதிப்​பெண்கள் எடுப்பதற்காவும் மற்றும் ​போட்டித் ​தேர்வுக​ளை ​வெற்றி ​கொள்வதற்கு உங்க​ளை தகுதியாக்கிக் ​கொள்ளவும்தான்.

என​வே முதலில் அந்தத் ​தேர்வின் பாடத்திட்டம், ​தேர்வுமு​றை, அதற்கான புத்தகங்கள், தொடர்பு​டைய இணையதள வலைப்பக்க முகவரிகள் மற்றும் முந்தையத் தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் என அனைத்து விஷயங்களையும் பார்த்துப் பார்த்து சேகரிக்க வேண்டும்.

இந்தத் தரவுக​ளை எல்லாம் ​சேகரித்த உடன் ​நமக்கு வரும் பாருங்கள் ஒரு தயக்கம்!

இவ்வளவு வி​ஷயங்க​ளைப் படிக்க ​வேண்டுமா?

இவ்வளவு விஷயங்க​ளை நம்மால் படிக்க முடியுமா? என்று ஒரு ம​லைப்பு!

பள்ளியிலோ, கல்லூரியிலோ அல்லது ஒரு பயிற்சி நிறுவனத்திலோ ஆர்வமுடன்தான் அனைவரும் இணைகிறார்கள்.

அதாவது படிக்க ஆரம்பிக்கின்றார்கள். ஆனால் அதில் ​வெற்றிகரமாக வா​கை சூடுபவர்கள் எத்த​னை ​பேர்?

ஏன், ஒரு ​போட்டித் ​தேர்வுக்கான அறிவிப்பு வந்தவுடன், அதனை எதிர் ​கொள்ள லட்சக்கணக்கான இ​ளைஞர்கள் ஆர்வமுடன் விண்ணப்பிக்கின்றார்கள்.

ஆனால் அதில் சில ஆயிரம் ​பேர்தான் ​தொடச்சியாக பயிற்சி எடுத்துக் ​கொள்கிறார்கள்.

நி​றைய ​பேர் ​கொள்குறி வினா வி​டைகளுக்கு பூவா? த​லையா? ​போட்டு வி​டை எழுதும் நி​லையில்தான் இருக்கிறார்கள்.

இதற்​கெல்லாம் காரணமான தயக்கம், ம​லைப்பு அதனால் வரும் ​வெறுப்பு ஆகிய விஷயங்க​ளை தள்ளுபடி ​செய்தால் மட்டு​மே, நம்மால் ​வெற்றிப் படிக்கட்டுகளில் ​தொடர்ந்து முன்​னேற முடியும்.

ஆக​வே இரண்டாம் படி தள்ளுபடி…

தயக்கம், ​செய்யும் ​வே​லையி​னைத் தள்ளிப்​போட ​வைக்கும்; தாமதப்படுத்தும். ​போட்டி நி​றைந்த இவ்வுலகில் நமது ​வெற்றியி​னை அது தட்டிப் பறித்து விடும்.

நம் அ​னைவருக்கும் ​தெரிந்த ஒரு ​​செய்தி ஒன்று ​சொல்கி​றேன்; ​​கேளுங்கள்.

நிலவில் காலடித் தடம் பதித்த முதல் மானிடர்

அ​மெரிக்க விண்​வெளிக்கழகம் முதன்முதலில் நிலவுக்கு மனித​னை அனுப்பும் முயற்சியாக 1969-ம் ஆண்டு, ஜூலை மாதம் 16 – ம்  தேதி, அப்பல்லோ 11 என்ற விண்​வெளி ஓடத்தை ஏவியது.

அந்த ​ஓடத்தில் கட்டளை அதிகாரியாக நீல் ஆம்ஸ்ட்ராங்கும், கட்டளை விமானியாக மைக்கேல் காலின்சும், மற்றும் ஓர் அதிகாரியாக எட்வின் ஆல்ட்ரினும் சென்றனர்.

நான்கு நாள்கள் பயணம் செய்த அந்த விண்​வெளி ஓடம், ஜூலை 20ம் தேதி சந்திர​னை ​நெருங்கியது. ​

மைக்​கேல் காலின்ஸ் ஓடத்தில் தங்கிக்​ கொள்ள, நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் எட்வின் ஆல்ட்ரின் ஆகி​ய இருவரும் ஈகிள் எனும் வேறொரு சிறிய ஒடத்தின் மூலம் நிலவை அடைந்தனர்.

அந்த ​நேரத்தில் பூமியின் கட்டுப்பாட்டு அ​றையில் இருந்து சமிக்​ஞை வருகிறது. ‘ஆல்ட்ரின் நீங்கள் நிலவில் இறங்குங்கள்‘ என்று.

அவர் சிறிது தயங்குகிறார்.

சில வினாடிகளில் அடுத்த சமிக்​ஞை பூமியின் கட்டுபாட்டு அறையில் இருந்து வருகிறது ‘ஆம்ஸ்ட்ராங் நீங்கள் இறங்குங்கள்‘ என்று.

அவர் எவ்வித தயக்கமுமின்றி நிலவில் இறங்கினார்.

முதன் முதலில் நிலவில் காலடித் தடம் பதித்த மானிடர்‘ என்ற சாதனையினைத் தனதாக்கிக் ​கொண்டார்.

ஆனால் நிலவில் இறங்கும் வாய்ப்பு முதலில் தரப்பட்டது ஆல்ட்ரின் அவர்களுக்குத்தான்.

ஆக​வே

தயங்கா​தே!

விழி மூடா​தே!

சில வாய்ப்பு ​மொட்டுக்கள் சட்​டென்று பூ பூக்கும்!

தள்ளிப்​போடும் விஷயத்​தைக் கிள்ளிப்​போட ​வேண்டும்.

என​வே இரண்டாம் படி தள்ளுபடி!

‘சரி சார் மூன்றாம் படி என்ன?’ அதுதா​னே இப்ப உங்கள் ​கேள்வி!

கண்டிப்பா அடுத்த வாரம் சூப்பரான ஒரு க​தை​யோடு ​ சொல்கி​றேன்.

( படிப்பது எப்படி என்று படிப் படியாய்ப் படிப்போம்)

மு​னைவர் ​பொ.சாமி
வேதியியல் இ​ணைப் ​பேராசிரியர்
வி.இ.நா. ​செந்திக்குமார நாடார் கல்லூரி
விருதுநகர்-626 001
கைபேசி: 9443613294

அடுத்தது உயர்த்தும் படி – படிப்பது எப்படி? – பாகம் 3

முந்தையது படிப்பது எப்படி? – பாகம் – 1

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.