கோலம் போடுவது என்பது நம் மக்களிடையே இருந்து வரும் பராம்பரிய பழக்கமாகும். இது அலங்காரக் கலையின் ஓர் அங்கமாகும். கோலமானது தினசரி வீட்டு முற்றத்திலிருந்து திருமணம் போன்ற விழாக்கள் வரை இடம் பெறுகிறது.
எளிமையான தாமரைக் கோலம் போடுவது எப்படி என்று பார்க்கலாம்.
இக்கோலம் போடுவதற்கு முதலில் படத்தில் காட்டியபடி 11 புள்ளியில் ஆரம்பித்து நேர்புள்ளியாக ஒன்றில் முடிக்கவும்.
படத்தில் காட்டியபடி நடுப்புள்ளியிலிருந்து எல்லா திசையிலும் ஒரு ஒரு புள்ளியைச் சேர்த்து நடுவில் பூ வரையவும்.
படத்தில் காட்டியபடி சுற்றிலும் தாமரைப் பூக்களை வரையவும்.
தாமரைப் பூக்களுக்கிடையே உள்ள புள்ளிகளை பெரிய வட்டமாக படத்தில் காட்டியபடி இணைத்து அதில் சிறுசிறு இலைகளை வரையவும்.
பின் தாமரைப் பூக்களுக்கு ஒரு வண்ணமும் நடுவில் உள்ள பூவிற்கு ஒரு வண்ணமும் இலைகளுக்கு ஒரு வண்ணமும் நடுவில் உள்ள இடைவெளிக்கு ஒரு வண்ணமும் கொடுக்கலாம்.