தாமரையாள் வீற்றிருப்பாள்
திருமால் மார்பில்
தாராள அருள்தந்து
நம்மைக் காக்க!
பேராளன் பேர்சொல்லி
ஏங்கினாலும்
பேரொளியாள் திருக்கண்ணால்
அமையும் எல்லாம்!
சீராமன் சீற்றத்தால்
அரக்கர் வீழ்வர்
சீதேவி துணையிருந்தால்
இரக்கம் வாழ்வர்!
மாதேவி மாகாக்க
திருமா லுடனே
மாலழகி நலம்தந்து
அருள்வாள் காண்பீர்!
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!