மின்னும் சதங்கை பளீர் பளீர் என
தஞ்சம் கொள்வீர் நெஞ்சம் பட படவென
இன்முறுவல் திருமுகமதனில் சடக்கென விழ
இன்பமுறவே நம் வினை தளை அவிழ!
தான மல்லபுரத்தில் அண்ணல் குடிகொள்ள
இன்னல் இருள் அகலும் கண்ணனை தாள் தொழுக!
பால் தயிர் வெண்ணெய் திரண்டதனால்
திருமேனி பெருத்தவனில், ஆலிலை துயில்பவனில்
அன்புருகி மேல் விழுக!
அழகியார் இணையோடு வாரி வழங்கும் வள்ளலை
பழகி தாள் பிடித்து பழவினை களைந்திடுக!
தாமோதரனை பணிந்திடுக! தாமல் விரைந்திடுக!
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com
🙏🙏 arumaiyana korvai