தாயின் அணைப்பினிலே – கவலைத்
தானே மறையுமடி – பாசம்
ஒளிரும் மனதினிலே – வேதனை
ஓடி ஒளியுமடி!
பருவம் பொருட்டில்லை – அன்பை
பகிர்ந்து கொள்வதனால் – மனம்
பாரம் நீங்குமடி – பாசம்
பாய்ந்து வருகுமடி!
குழந்தை அழைப்பினிலே – மனம்
குழைவாள் அன்னையடி – குழவி
குளிர் முகத்தினிலும் – மலர்க்
கமலம் விரியுமடி!
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com