செல்லத்தாயே!
செல்வத்தாயோ
ஏழைத்தாயோ
நீ ஏணித்தாயே!
பசியால் நானழுதால்
பதறும் நெஞ்சம்
பசியாற்றிய பிறகும்
அன்பே மிஞ்சும்!
அழைப்பதும் அணைப்பதும் நீயே!
அடிப்பதும் ஆறுதலும் நீயே!
கனவும் நினைவும் நீயே
உன்னத உறவும் நீயே!
பகலும் இரவும் நீயே
புனித புண்ணியம் நீயே!
சலிப்பில்லை உனதன்பில்
இணையில்லை அரவணைப்பில்!
தூங்க வைக்க தாலாட்டு
உயர வைக்கும் பாராட்டு
ஏங்க வைக்கும் பேரன்பு
எல்லையில்லா தாயன்பு!
நாவின்றி சொல்லில்லை
தாயின்றி சேயில்லை!
கண்கண்ட கடவுளே
தியாகத்தின் திருஉருவே!
உயிர்த்தேன் வயிற்றில்
உதித்தேன் மடியில்
உயிரே உணர்வே
உலகத்தின் திறவுகோலே
உனை மறந்த மனிதரில்லை
உனை மறந்தவர் மனிதரேயில்லை!
கி.அன்புமொழி M.A. M.Phil. B.Ed.
முதுகலைத் தமிழாசிரியர்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!