திண்ணைகள் சொல்லும் கதைகள் கேட்போம்!
என்னில் அமர்ந்து சின்னஞ்சிறுவர்கள் கல்வி கற்றதுமுண்டு
என்னைச் சுற்றிபெரியோர் நிறைய கதைகள் கேட்டதுமுண்டு
என்மீதமர்ந்து ஆடுபுலிஆட்டம் விளையாடியதுண்டு
என் மடியின் மீது தலை வைத்து அயர்ந்து தூங்கியதுண்டு
வெண்சுண்ணாம்பு ஊடே செந்நிற பட்டை என
கோவிலுக்கிணையாய் வீடுகள் இருந்த காலமும் உண்டு
எல்லா கதவும் திறந்தே இருக்கும்
நீரும் மோரும் நிறைய கிடைக்கும்
சிறுகுழந்தைகளென்றால் சோறும் கிடைக்கும்
வள்ளல் திண்ணைகள் மறைந்த பின்னே
வீதியும் சுருங்கிருச்சு!
மனித மனங்களும் சுருங்கிருச்சு!!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942