தித்திக்குமா இந்த தீபாவளி – இல்ல
பத்திக்குமா நாம வெச்ச வெடி
எத்திக்கும் கெட்டுப் போன பூமியிருக்க
எப்போதும் மாசடைந்த காற்றும் வீச
சத்தமின்றி மொத்தச்சூழல் கெட்டுக் கிடக்க
சந்ததிக்கு என்னதான் மிச்சம் கொடுக்க (தித்திக்குமா)
செத்துப் போன ஆறெல்லாம் ஓடையாச்சு
சுத்தி இப்ப மேடாக அதுவும் போச்சு
வத்தாத கேணியெல்லாம் வாடிப் போச்சு
வாழ வழியின்றி ஊருசனம் நிக்கலாச்சு (தித்திக்குமா)
சுற்றி வந்த பட்டாம்பூச்சி எங்கபோச்சு
சுகமாக வீசும் காற்றும் விசமாக செத்துப்போச்சு
மெத்தப் பெய்யும் மழைகூட புயலாச்சு
மொத்தத்துல விசக்கூண்டா புவி மாறிப்போச்சு (தித்திக்குமா)
–இராசபாளையம் முருகேசன் கைபேசி: 9865802942