மூத்தக்குடி பிறப்பே
மூப்பினில் தலைமகளே
முத்தமிழ் உனக்குள்ளே நர்த்தனம் ஆடிடுதே
நிறைமதி நிலவாக நிலத்தினில் படர்ந்தவளே
நிறைகுடம் போலவே அகத்தினில் நிறைந்தவளே
இளவேனில் காலத்தில் இதமாகப் பிறந்தவளே
இளமையும் குறையாமல் வளமையாய் நிற்பவளே
உன்வரவில் திருநாடும்
நலமுடன் தழைக்கட்டும்
உவகையின் தொடக்கமும் நீயென்று ஆகட்டும்
உழைக்கும் நற்குடிகள் உயர்வினைக் காணட்டும்
பிழைக்கும் நல்வழிகள்
பலநூறு பிறக்கட்டும்.
அனைவருக்கும் இனிதான தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
க.வடிவேலு
ஆசிரியர் பயிற்றுநர்
காட்பாடி
கைபேசி: 6374836353