கற்கொண்டு விலங்கினை
அடித்துண்டு வாழ்ந்தவன்
கற்கால மனிதனாய்
எங்ஙனம் நாம் வாழ்வதாம்
எனயெண்ணி எண்ணியே
காலத்தின் பரிணாமம்
எதுவெனக் கண்டவன்
பயிர்கொண்டு உழவுகண்டு
வாழ்வதே வாழ்வியலாம்
எனக்கொண்டான் உழவினையே…
சோறுடைக்கும் விவசாயம்
மானிடனின் மகத்துவமாய்
உழவுக்கு உதவிசெயும்
உயிர்க்கெல்லாம் நன்றிகூறப்
பிறந்ததுவே தைப்பெருநாள்…
தீயதை அழித்திங்கு நல்லதைப் புகட்டவே
நலமாற காப்புக் கட்டும் போகி முதற்நாளே…
நல்வழிப் பிறக்கவே பொற்கரம் தருவதாம்
புதுப்பொங்கல் கண்டிடும் தைத்திருநாளே…
விவசாயம் செய்வோர்க்கு உறுதுணை புரிந்திடும்
காளைக் கன்றுக்கு நன்றவிழ்தல் மாட்டுப்பொங்கலே…
களிப்புடன் அனைத்துயிரும்
எழுச்சியினைப் பெற்றிடவே
மஞ்சுவிரட்டு சல்லிக்கட்டாம் உழவர் திருநாளே…
இவ்வாறு பயணிக்கும் தமிழர்நம் திருநாளை
என்றென்றும் தலையாயப் பெருநாளாய்
மகிழ்வுடனே கொண்டாடுவோம் சீரும் சிறப்புடனே…
அனைவருக்கும் தைத்திருநாள் நல்வணக்கங்கள்!
சிவா.தேவராசு
ஓசூர்
கைபேசி: 9941503810
மின்னஞ்சல்: devakalai006@gmail.com