ஒவ்வொரு நாளும் சூரியன் உதிக்கும் முன்பு உறக்கத்திலிருந்து விழித்து எழுதல் வேண்டும்.
உரிய பொருளை உரிய இடத்தில் ஒழுங்காக வைத்தல் வேண்டும்.
உரிய கடமைகளை, உரிய நேரம் விருப்போடும், விழிப்போடும், பொறுப்போடும், பொறுமையோடும், ஒழுங்காகச் செய்து முடித்தல் வேண்டும்.
எங்கும், எதிலும், எப்போதும், விழிப்போடு வாழ்தல் வேண்டும்.
எங்கும், எதையும், எப்போதும் பயனள்ளவற்றிற்கே செலவிடல் வேண்டும்.
எங்கும், எதிலும், எப்போதும், சோம்பலின்றி, சுறுசுறுப்பாக இருத்தல் வேண்டும்.
வாழ்க்கையில் நல்லொழுக்கங்களைக் கடைப் பிடித்தல் வேண்டும்.
இயன்றவரை உரியவர்க்கு உரிய நேரம் உரிய உதவியைச் செய்திடல் வேண்டும்.
நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள எதையும் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
செய்ய முடிந்ததையே சொல்லல் வேண்டும். சொல்லியதைச் செய்து முடித்தல் வேண்டும்.
நல்லதே நினைத்தல் வேண்டும்!
நல்லதே சொல்லல் வேண்டும்!
நல்லதே செய்தல் வேண்டும்!
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!