விடிஞ்சா போதும்…
வாட்டி வதைக்கும் உள்ளத்தோட
வெப்பத்தை அள்ளித் தர
இதோ வந்து விட்டார் சூரியன்
நாளுக்கு நாள் டிகிரியில்
எகிறிக் கொண்டிருக்கிறது
அன்பு தொல்லை
வெயிலில் நிற்கும் வாகனத்தில் அமர
ஆஃப் பாயில் நினைப்பு தான் வருகிறது
பைபாஸ் ஓரம் இருந்த
மரங்கள் விட்ட சாபம் போல
கரண்ட் கம்பத்திற்கும்
தெருவில் வளர்ந்த மரத்திற்கும்
நடந்த சண்டையில்
எனது வீட்டுக் குளிர்ச்சி வெட்டப்பட்டது
மொட்டை மாடிக்கு கீழே குடியிருப்பவனுக்கு
தினமும் அக்னி பிரவேசம் தான்
கதி. பழனியப்பன்