கண் இமைக்காமல்
பார்க்க வைக்கும் கடலே
அழகாய் வீழும் அருவிகளே
நளினமாய் ஓடும் நதிகளே
ஏறிட்டுப் பார்க்க வைக்கும் ஏரிகளே
குனிந்து பார்க்க வைக்கும் குளங்களே
கீழே பார்க்க வைக்கும் கிணறுகளே
அண்ணாந்து பார்க்க வைக்கும் மழை மேகங்களே
இவையனைத்தும் நீ தானே
இவையனைத்தும் நீ தானே
தாய்ப் பாலே
பசும் பாலே
ஆண்பாலே
பெண்பாலே
அன்பாலே நாங்கள் இருக்கிறோம்
இவையனைத்தும் நீ தானே
மின்சார இணைப்பு போல்
தண்ணீர்குழாய் இணைப்புகளும் நம் வீட்டில்
உன்னிலும் என்னிலும்
சாதி மத பேதமின்றி ஓடும் சிவப்பு ரத்தமே
வானத்து மேகங்களே வந்திடுங்கள் பூமிக்கு
வளர்ந்து விடும் வனங்கள் வளங்கள்
வாழ்ந்திடும் எங்கள் வாழ்வியல்
இணைந்திடுவோம் இயற்கையில்
வாசித்து விடுவோம் வாழ்க்கையை
சுவாசித்து விடுவோம் தென்றலை
இவையனைத்தும் நீ தானே
உலக உயிரினம் அனைத்திற்கும்
ஒரே இனம் அது தண்ணீரினம் தான்
கடலுக்குள் ஒரு உலகத்தையும்
கடலுக்கு வெளியே ஒரு உலகத்தையும்
வாழவைத்துக் கொண்டிருக்கிறாயே
எத்தனை துளிகளால் நீ நிறைந்துள்ளாய்
சொல்ல முடியவில்லையே
தண்ணீரின் பயனும் பயணமும் பட்டியலும்
நீள்கின்றன நீரில்
இவையனைத்தும் நீ தானே
மழைத்துளிகள் மண்ணை நனைத்தன
வியர்வைத் துளிகள் என் விழிகள் நனைத்தன
தண்ணீர் துளிகள் தாகம் தீர்த்தன
ஆனந்த கண்ணீரில் அழகாய் குளித்தேன்
மதுபானம் குளிர்பானம் தேநீர்பானம்
உனக்கும் எனக்கும் எவ்வளவு நெருக்கம்
காதலர்களும் கடற்கரை ஓரத்தில் அலைகளாய்
ஈர முத்தம் இன்னும் இனிக்கிறது
இயற்கை இயல்பானது உன் விஞ்ஞானத்தை
இயற்கையில் காட்டாதே
கவிதை எழுதியாற்று
இயற்கையின் இயல்போ
சிறுநீர் வயிற்றை முட்டிகொண்டு நின்றது
இவையனைத்தும் நீ தானே
இவையனைத்தும் நீர் தானே
தினம் தினம் தண்ணீர்த் தினம் தானே
ப. கலைச்செல்வன்
இளங்கலை வணிகவியல் மூன்றாம் ஆண்டு
பெரியார் ஈ.வே.ரா. கல்லூரி
திருச்சி-23
கைபேசி: 9385517371
மின்னஞ்சல் : kannankalaiaselvan2001@gmail.com
மறுமொழி இடவும்