தேவையான பொருட்கள்
தினை அரிசி – 75 கிராம்
உளுந்தம் பருப்பு – 25 கிராம்
வெந்தயம் – 2 கிராம்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
தினை அரிசி, உளுந்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைக் கழுவி சுமார் 3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் தோசை மாவு பதத்திற்கு மூன்றையும் ஆட்டி எடுத்துக்கொண்டு உப்பு சேர்த்து 12 மணி நேரம் புளிக்க வைத்து பின் தோசையாக வார்த்தெடுக்கவும். சுவையான தினை தோசை தயார்.
முதல் நாள் மாலையில் அரைத்த மாவை மறுநாள் காலையில் தோசையாக வார்த்தால் சுவையாக இருக்கும்.
தினை தோசை அரிசி தோசையைப் போலவே சுவையாக இருக்கும்.