தியாகக் கரம்!

அண்ணன் சிற்பி, தம்பி ஓவியன். இருவருக்கும் எவருடைய ஆதரவும் கிடக்காத நிலையில் ஒருவர் உழைத்து மற்றொருவரை படிக்க வைப்பது என முடிவு செய்கின்றனர்.

சிற்பிக்கு நல்ல வேலை கிடைக்கவில்லை. தனக்கு கிடைத்த கல் உடைக்கும் வேலையை கடினமான செய்து 12 ஆண்டுகளாக தம்பியை படிக்க வைக்கிறார்.

12 ஆண்டுகளுக்கு பின் தலைசிறந்த ஓவியனான தம்பி இப்போது சொல்கிறான், “அண்ணா நீ படி நான் உன்னை படிக்க வைக்கிறேன்” என.

இரு கரங்களையும் கூப்பி தம்பியை பார்த்து அண்ணன் கூறுகிறான் “12 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சிற்பியின் கரங்களல்ல இது! ஒரு கல் உடைப்பவனின் கரமாகி இருக்கும் இந்த கரத்தால் சிற்பங்களை உருவாக்க இயலாது” என்று.

நம்மையும் சில கரங்கள் உருவாக்கியிருக்கும்.

ஒரு போதும், அதன் தியாகத்தை மறக்காது வாழ்வது மானுட பண்பாடு.

நல்லவற்றை போற்றும் போது அல்லவை காணாமல் போகும்.

இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942

இராசபாளையம் முருகேசன் அவர்களின் படைப்புகள்