ஆங்கிலேயர் அஞ்சினர்
ஐயரைக் காணவே
தாங்கினர் சாய்க்கச்
சுடுகலன் – எங்கும்
விவேகமாய் தீரராய்
வெற்றியும் கண்ட
வவேசு மணியரை வாழ்த்து!
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com
பொருள்:
ஆங்கிலேயர்கள் வ.வே.சு ஐயரைக் கொல்ல துப்பாக்கி ஏந்தி இங்கும் அங்கும் தேடி அலைந்துத் தோல்வியும் கண்டனர்.
நம் வ.வே.சு ஐயர் விவேகத்துடனும், வீரத்துடனும் வெள்ளையனை வெற்றிக் கண்டார்.
அப்பேர்ப்பட்ட தியாகச் சீலரான வரகனேரி வேங்கடேச சுப்ரமணிய ஐயரை வாழ்த்துவோம்!
இப்பாடல் நேரிசை வெண்பா செய்யுள் வகையைச் சார்ந்தது.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!