தியாகம்!

திருவள்ளூரில் நானும் என் மனைவியும் என்னுடைய பெற்றோரைப் பார்த்துவிட்டு பெங்களூருக்கு ரயிலில் திரும்பி கொண்டிருந்தோம்.

ரயிலில் எங்கள் அருகில் ஒரு முதியவர் அமர்ந்திருந்தார். அந்த முதியவர் முகம் வாடியிருந்தது. அவர் பசி மயக்கத்தில் இருக்கிறார் என்பது தெரிய வந்தது.

அப்பொழுது என் மனைவி எங்களோடு கொண்டு வந்த இரண்டு உணவு பொட்டலங்களை வெளியே எடுத்தாள்.

அவளிடம் இருந்து ஒரு பொட்டலத்தை வாங்கி அதனைப் பிரித்து, நானும் அந்த முதியவரும் உணவைப் பங்கிட்டு சாப்பிட்டோம்.

இதை கண்ட எனது மனைவி என்னை முறைத்தாள்.

“ஏங்க, நாம தயார் பண்ணி எடுத்துட்டு வந்த சாப்பாடு பொட்டலத்தை அப்படியே அந்த பெரியவருக்கு கொடுத்திருக்கலாமே? எதுக்கு ரெண்டு பேரும் பாதி பாதி சாப்பிட்டீங்க?” மிதமான கோபத்தில் கேட்டாள் என் மனைவி.

நான் கூறியதைக் கேட்டதும் என் மனைவி என்னை பெருமையாகப் பார்த்தாள்.

M.மனோஜ் குமார்
சென்னை
கைபேசி: 9789038172