தனது நிலை குறித்து திருநங்கை ஒருவர் சொல்வதாக அமைந்த கவிதை.
ஆணுக்குள் பெண்ணாய்
ஒரு அபூர்வ படைப்பு!
அனைவருடனும் ஒன்றாக
எங்களுக்கு ஒரே துடிப்பு!
இந்த நவீன உலகத்தில்
நாங்கள் ஒரு புதுவித பிறப்பு!
ஆண்களுக்கும் எங்கள்
மீது ஒருவித ஈர்ப்பு!
முக்கியமான சில பணிகளில்
எங்களுக்கு மறுப்பு!
ஏன் இந்த படைப்போ?
எங்களுக்கு இறைவன் மீது
இருக்கிறது வெறுப்பு!
வருடந்தோறும்
சுமங்கலியாய் இருப்போம்!
வருடத்தில் ஒரு நாள் மட்டும்
விதவையாய் இருப்போம்!
பெண்களை விட ஒரு மடங்கு
நேர்த்தியாய் இருப்போம்!
சமுதாயத்தில் மதிப்பற்ற
சவங்களாக கிடப்போம்!
சாதித்து வாங்கிய
பட்டங்களை விட
சமுதாயத்தில் கொடுக்கும்
பட்டங்களே எங்களுக்கு அதிகம்!
ஆண்குறி அறுத்து
பெண்குறி மறைத்து
வாழ்ந்தாலும் பெண்ணாக
எங்களை மதிப்பதில்லை!
பெயர் சொல்லி அழைப்பதில்லை!
நான் கடவுளாக இருந்திருந்தால்
மனிதர்களுக்கு
இந்த இருபிறவியை
கொடுத்திருக்க மாட்டேன்!
ஏனென்றால் நான் திருநங்கையாக
இருந்து அந்த வலியை
உணர்ந்தவள் என்பதால்!

பெ.சிவக்குமார்
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம்
கைபேசி: 9361723667
மின்னஞ்சல்: sivakumarpandi049@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!