காதலாகி பாசமாகி கசியும் உள்ளம்
கண்ணனுக்கு தாசனாகி கழலைத் தேடும்
கடினமான விளைவுகளும் கரைந்து செல்லும்
நட்டமில்லா நன்மைகளும் நமதில் தங்கும்
காத்திருப்பான் நமக்காக கருணைத் தெய்வம்
மாற்றிடுவான் வினைகளையே மனதை அள்ளும்
நாடிடுவோம் இப்பொழுதே நவில்வோம் நாமம்
நாரணனின் அருள்பெறுவோம் நயந்து வாரும்
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com