திருநாராயணன்

பாடி பரவசமாய்

பாம்பணையான் பேர்சொன்னேன்

ஆடி மகிழ்ந்தே

அகமுள் கரைந்தேனே

தேடிய யாவும்

தெரியாத பல்பொருளும்

நாடிய செல்வமும்

நன்கமைய நான்கண்டேன்

தெவிட்டாத இன்னமுதன்

தெய்வத் திருமகனே

துவளுதே உள்ளம் துவன்று

தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com

தா.வ.சாரதி அவர்களின் படைப்புகள்