திருமண வாழ்த்துக்கள்!

திருமண வாழ்த்துக்கள்

திருமணம் எப்படிப்பட்டது என்பதையும் உறவுகளின் உன்னதத்தையும் சொல்லும் கவிதை – திருமண வாழ்த்துக்கள்!

உயர்ந்த நற்பண்புகளால் நெய்த

உறவுப் பின்னல்கள்

அமைதியும், அன்பும் ஆன

அளவிலா நேய இதயங்கள்…

இல்லாத தவத்தில் கேட்காத வரமாய்,

இணையும் ஸ்வரங்கள்…

மனிதம் பார்க்கும், மனங்களை மதிக்கும்,

இளைய மணஜோடி…

எல்லாம் பெற்று ஏற்றத்துடன்

வாழ எல்லையிலா ஆசிகள் என்றுமே…

கரம் சேர்ந்த அன்று காதலர் தினம்

மணம் முடிந்து காதல் துவங்கும் அரிய புதினம்

மழைத்துளி முத்தாய்,

மண்ணுக்குள் வைரமாய்,

புடம் போட்ட தங்கமாய்… ஒளிதாருங்கள்

இருவர் கண்கள் வரைந்த ஓவியம் அஜந்தாவாக…

மணமக்கள் தித்திப்பாலான கற்பக விருட்சமாக…

ஆகர்ஷிக்கும் வருண இழைகள் வாழ்த்தும்

ஆதர்ச ஜோடிகளாக…

காக்கும் இருவரையும் என்றும்

கடவுள் கரங்கள் நிலழாய் தொடர…

வாழும் வாழ்க்கையை, புனிதமாய், புரிதலாய்,

மகிழ்வாய் வாழ்ந்து, மழலைகள் இணைய…

நிறைந்த, பூரணத்துவ மனதுடன் வாழ்த்துக்கள்!

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.