இயற்கை எழில் கொஞ்சும் – இங்கு
இறைவன் கூட தஞ்சம்
மறக்க வொண்ணா கலையும் – எங்கள்
மறத்தின் புகழ் பாடும்
கூவுகின்ற குயிலும் – பலர்
மனங்களையும் கவரும்
கரையும் அந்த காக்கை – எங்கள்
உறவுகளை வரவேற்கும்
நறவுஞ் சாந்தும் கமழ – நடக்கும்
சுப நிகழ்வும்
சுற்றம் சூழ வாழ்த்த – உங்கள்
வாழ்க்கை இனிதே அமையும்
வாழ்க! வாழ்க! வாழ்க!
வளமுடன் வாழ வாழ்த்துகள்!!
சுகன்யா முத்துசாமி