திருமால் பாடல்கள் தொகுப்பு. காக்கும் கடவுளான திருமாலைப் போற்றிப் பாடும் பாடல்கள் இவை.
திருமால் வணக்கம்
ஆதிசேசா அனந்தசயனா
ஸ்ரீநிவாசா ஸ்ரீ வெங்கடேசா
வைகுண்ட நாதா வைதேகிப்ரியா
ஏழுமலை வாசா எங்களின் நேசா
வேணுவிலோலனா விஜயகோபாலா
நீலமேக வண்ணா கார்மேக கண்ணா
காளிங்க நர்த்தனா கமனீய கிருஷ்ணா
கோமள வாயனா குருவாயூரப்பனா
ஸ்ரீராம சந்திர மூர்த்தியைப் பாடு
தீவினை யகலவன் திருவடி தேடு
பாவங்கள் போக்க பஜனைகள் செய்வோம்
பார்த்த சாரதியின் பாதம் பணிவோம்
திருப்பதி மலையில் திருமுகம் காட்டும்
திருவேங்கடத்தான் திருவருள் பெறுவோம்
ஸ்ரீரெங்கநாதன் பள்ளி கொண்டிருக்கும்
ஸ்ரீரெங்கம் சென்றவன் திருவடி பணிவோம்
திருப்பதி மலைமேல் இருப்பன்
திருப்பதி மலைமேல் இருப்பவனே – எங்கள்
தீராத வினைகளைத் தீர்ப்பவனே
ஸ்ரீ நிவாசா கோவிந்தா-ஹரே
ஸ்ரீ வெங்கடேசா வைகுந்தா
ஏழு மலைமேல் இருப்பவனே
எல்லா வினைகளும் தீர்ப்பவனே
பாண்டுரெங்கா கோவிந்தா-ஹரே
பரம தயாளா வைகுந்தா
உளமெனும் கோவிலில் வசிப்பவனே
உலகோரை வாழவைக்க வந்தவனே
வெங்கடரமணா கோவிந்தா-ஹரே
சங்கட ஹரணா வைகுந்தா
திருப்பதி மலைமேல் இருப்பவனே –எங்கள்
தீராத வினைகளைத் தீர்ப்பவனே
சங்கு சக்கரா கோவிந்தா-ஹரே
சாரங்கதாரா கோவிந்தா
ஏழு மலைமேல் இருப்பவனே
எல்லா வினைகளும் தீர்ப்பவனே
பக்த வத்சல கோவிந்தா-ஹரே
பாரதப்ரிய கோவிந்தா
உளமெனும் கோவிலில் வசிப்பவனே
உலகோரை வாழவைக்க வந்தவனே
பசுபால கிருஷ்ண கோவிந்தா-ஹரே
பாபவிமோசன கோவிந்தா
அலர்மேலுநாதா கோவிந்தா-ஹரே
ஆபத்பாந்தவா கோவிந்தா
திருப்பதி வாசா கோவிந்தா-ஹரே
திருமலை வாசா கோவிந்தா
ரெங்கா ரெங்கா ஓடிவா
ஏ… ரெங்கா ரெங்கா ஓடிவா பாண்டுரங்கா ஓடிவா
பண்டரி புரம்வாழும் பாண்டுரங்க சாமியே
நீ… எங்களைக் காக்கவே ஓடோடிவா
பாற்கடலின் மீதினில் பாம்பணையில் தூங்கியே
பார் முழுதும் படியளக்கும் பாண்டுரங்க சாமியே
நீ… எங்களைக் காக்கவே ஓடோடிவா (ஏ… ரங்கா)
மங்காபுரம் தாயிருக்க மலைமேலே நீயிருக்க
ஏழுமலைநாதனே எங்கள்சீனி வாசனே
நீ… எங்களைக் காக்கவே ஓடோடிவா (ஏ.. ரங்கா)
எங்கும்நீ திளவும் எல்லோருமே வாழவும்
பத்துஅவ தாரமாய் பார்புகழ வந்தவா
நீ… எங்களைக் காக்கவே ஓடோடிவா (ஏ… ரங்கா)
சங்குசக்கரம் கொண்டுவா தாயாரையும் கூட்டிவா
கண்குளிரக் காணவா கார்மேக சாமியே
நீ… எங்களைக் காக்கவே ஓடோடிவா (ஏ… ரங்கா)
சர்வலோக நாயகா சங்கரனின் மைத்துனா
பாரளந்த தேவனே பறந்துவாராய் சாமியே
நீ.. எங்களைக் காக்கவே ஓடோடிவா (ஏ… ரங்கா)
காவடியான் மாமனாம் காலடியால் வாமனை
மூவடியாய் ஆண்டவா என்பாவடியில் ஆடியே
நீ.. எங்களைக் காக்கவே ஓடோடிவா (ஏ… ரங்கா)
ஆனந்த வாழ்வினைப் பெற திருமால் பாடல்கள் தொகுப்பு பாடி வழிபடுவோம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!