போன அம்மா திரும்பி வந்தார்
புதிய நகைகள் வாங்கி வந்தார்
நானும் நகைகள் போட்டுக் கொண்டு
நடந்து போவேன் பள்ளிக்கு இன்று
போன அப்பா திரும்பி வந்தார்
புத்தகம் பலகை வாங்கி வந்தார்
நானும் பையிற் போட்டுக் கொண்டு
படிக்கப் போவேன் பள்ளிக்கு இன்று
போன பாட்டி திரும்பி வந்தார்
புதிய சட்டை வாங்கி வந்தார்
நானும் சட்டை போட்டுக் கொண்டு
நன்றாய் போவேன் பள்ளிக்கு இன்று
போன மாமா திரும்பி வந்தார்
புதிய குடையை வாங்கி வந்தார்
நானும் குடையை விரித்துக் கொண்டு
நடந்து போவேன் பள்ளிக்கு இன்று
போன தாத்தா திரும்பி வந்தார்
புதிய வண்டி வாங்கி வந்தார்
நானும் அதிலே ஏறிக் கொண்டு
விரைந்து செல்வேன் பள்ளிக்கு இன்று
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!