1. திருவிளக்குகள் இரண்டு பூஜையறையில் சுடர் விட்டுப் பிரகாசித்தால் அங்கே சகல சம்பத்துக்களும் பொங்கிப் பெருகும்.
2. திருவிளக்கின் அடிப்பகுதி – சரஸ்வதி பிரம்மா அம்சம்
3. திருவிளக்கின் தண்டுப்பகுதி – லட்சுமி பெருமாளின் அம்சம்
4. திருவிளக்கின் குழிப்பகுதி – பார்வதி சிவன் அம்சம்
5. திருவிளக்கின் சுடரில் லட்சுமியும், அதன் ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதியும் பிரசன்னமாவர்.
6. நெய் தீபம் – சகலவித சுகமும் ஏற்படும்
7. நல்லெண்ணெய் தீபம் – எல்லாப் பீடைகளும் விலகும்
8. விளக்கெண்ணெய் தீபம் – புகழ், அபிவிருத்தி உண்டாகும்
9. கடலெண்ணெய் தீபம் – கூடாது, வறுமை, கடன் ஏற்படும்
10. நெய், இலுப்பை, விளக்கெண்ணெய் – மூன்றும் கலந்த தீபம் ஏற்றச் செல்வம் பெருகும்
12. நெய், இலுப்பை, விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆக ஐந்தும் கலந்த தீபம் ஏற்றி 45 நாட்கள் அம்மனை வணங்கினால் அம்மன் அருள் கிடைக்கும்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!