பண்டிகையாம் பண்டிகை
தீபாவளிப் பண்டிகை
வண்ணவண்ணப் புத்தாடை
வாங்கியுடுத்தும் பண்டிகை
அண்டைஅயல் உறவுடனே
அகமகிழும் பண்டிகை
கண்டுபோல இனிப்புகளைப்
பகிர்ந்துண்ணும் பண்டிகை.
நன்மையெலாம் ஓங்கிடவும்
தீமையெலாம் நீங்கிடவும்
இன்பமெலாம் பொங்கிடவும்
இயன்றநலம் தங்கிடவும்
வன்மைசூது வாதொழிந்து
வாழ்விலென்றும் மகிழவென்று
நன்றிதுவே பாடமென்று
நமக்குச்சொல்லும் பண்டிகை
வண்ணமான வேடிக்கை
வாணம் பூ மத்தாப்பு
எண்ணம்போல ஒளிரவே
ஏற்றிவைக்கும் தீபங்கள்
கொண்டநல்ல சுடர்தரும்
குதூகலமே நிறைந்திடவே
கொண்டாடும் பண்டிகை,
நம்தீபாவளிப் பண்டிகையே!
– கவிஞர் இளவல் ஹரிஹரன், மதுரை
Visited 1 times, 1 visit(s) today
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!