தீப ஒளியின் கொண்டாட்டமே வா!
தீபாவளியே வா! வா!
கொரோனா எனும் இருள் நீக்க
கொடை ஒளியே வா!
முகக்கவசம் எனும் முள்ளினை
முறிக்க முந்தி வா!
பட்டாசு ஒளியில் பகலவனாய்
பட்டையைக் கிளப்ப வா!
புத்தாடை உடுத்தி மகிழ
புன்னகை புரிந்து வா!
மக்கள் மனதின் பயம்
மறைய மகிழ்வே வா!
பள்ளி திறக்க தீபாவளியே
பறந்தோடி பாய்ந்து வா!
தீரா நோயைத் தீர்க்க
தீபாவளியே வா! வா!
கி.அன்புமொழி
தமிழாசான்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்
மறுமொழி இடவும்