ஆண்டுக்கு ஒரு புது சட்டை
நம்ம வீட்டு முறுக்கு சீடை
அதிரசம் பணியாரம் தெரு
முழுக்க பயணம் செய்யும்
எல்லா வீட்டு பலகாரமும்
நம்ம வீட்டுக்குள்ள வரும்
இரண்டு ரூபாய் லட்சுமி வெடி
காயப்படுத்தாம வெடிச்சு சிரிக்கும்
எண்ணெய் தேய்த்து குளிச்சு வந்தா
இட்டலிக்கு கறிக்குழம்பு
இலையில் தான் சாப்பாடு
இப்படியாக தீபாவளி இருந்த
காலம் பொற்காலம்
மகிழ்ச்சி மட்டும் தந்து சென்ற நற்காலம்!
பெட்டி பெட்டியா பட்டாசு
கலர் கலரா இனிப்பு வகை
ரெடிமேட் டீசர்ட் எல்லாம் இருந்தாலும்
கைபேசியில் படமெடுக்க மட்டும் தான் தீபாவளி
பக்கத்து வீடு கூட பாகிஸ்தான் பார்டர் ஆக
சுருங்கி போன வாழ்க்கையில
எங்க இருந்து மகிழ்ச்சி வரும்?
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942